Sudharshini / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை, எல்ல பொலிஸார் இன்று (22) கைதுசெய்துள்ளனர்.
எல்ல, கரந்தகொல்லை பகுதியைச் சேர்ந்த வி.ஏ.என்.ரி.குணவர்த்தன என்ற 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, மேற்படி நபரின் வீட்டை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேற்படி நபரையும் கைதுசெய்துள்ளனர்.யுnஉhழச
4 hours ago
8 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Apr 2026