Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை மாவட்ட மீனவர்கள் ஒன்றரை அங்குலமுடைய மீன்பிடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதுக்கு இதுவரை காலமும் இருந்து வந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அப்துல்லா மகரூப் தெரிவித்துள்ளார்.
இன்று (12) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கடந்த மூன்று மாத காலமாக மேற்கொண்டு வந்த எனது அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இதுவாகும். எனினும் ஏழை மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை நான் கருதுகின்றேன்.
இந்த மாவட்டத்தில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மீனவர்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.
பல உயர்மட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்களை திருகோணமலை மாவட்ட மீன் பிடி உதவிப்பணிப்பாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
53 minute ago