Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு. புஸ்பராஜ்
நானுஓயா, எடின்புரோ தோட்டத்தில் 3 மாதங்களாக மூடியிருக்கும் தேயிலைத் தொழிற்சாலையை மீண்டும் திறக்க கோரி 300 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இன்று (15) காலை 8 மணி தொடக்கம் 10 மணிவரை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 03 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களை திருத்துவதற்காக, தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதாக தோட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 03 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் தோட்ட நிர்வாகத்திடம் இது குறித்து வினவிய போது, இயந்திரங்களை திருத்துவதற்கு பணம் இல்லையென தெரித்துள்ளனர் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தேயிலை செடிகள் தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமறிக்கபடாமல் கைவிடப்பட்டுள்ளதெனவும் தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago