2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா            

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மொனராகலை ஜனவசம பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இரண்;டாயிரம் பேர்,   இன்று வெள்ளிக்கிழமை (12)  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுன்னர்.

மொனராகலைப் பகுதியின் குமாரவத்தை, பாராவில, கும்புக்கன், வெலியாய, நக்கல, உலந்தாவை, பாலாறு, குமாரதொல, மரகலை ஆகிய ஒன்பது இறப்பர் தோட்டங்களைச் சேர்ந்த மக்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்குரிய சம்பளம் வழங்க தாமதம், சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் வழங்கப்படாமை, 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படாமை, உட்கட்டமைப்பு வசதிகள் செய்துக்கொடுக்கப்படாமை, தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமை, தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனங்கள் போன்ற அதிமுக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வேலை நிறுத்தம் குறித்து, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் கவனத்துகும் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாகாண அமைச்சர் மேற்குறிப்பிட்ட தோட்டங்களின் முகாமைத்துவங்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, வேலை நிறுத்தப் போராட்டம் தொடருமென, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இவ்வேலை நிறுத்தப்போராட்டத்தினால், மேற்குறிப்பிட்ட தோட்டங்களின் அனைத்து செயற்பாடுகளும் பூரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .