Gavitha / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தேசிய நல்லிணக்கம், இலங்கையில் உயர்ந்த மட்டத்தில் இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை சென்றிருந்த அவர், தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டார். பின்னர், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெயல பண்டார, மல்வத்த பீடத்தின் மஹாநாயக்க வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்துக்குச் சென்று, அதன் மஹாநாயக்க தேரரான சங். கலகம அத்ததஸ்ஸீ தேரர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்கர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 'நல்லிணக்கமானது, இலங்கையில் உயர்ந்த நிலையில் இருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பேகர் ஆகிய இனங்களைச் சேர்ந்தோர், ஒன்றுமையுடன் செயற்படுகின்றனர். தன்மீது தற்கொலைத்தாக்குதல் நடத்தி படுகொலை செய்வதற்கு முயன்ற பயங்கரவாதிக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்தமை, நாட்டின் நல்லிணக்கம் தொடர்பில் முன்மாதிரியாகும்' என அவர் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago