Editorial / 2020 மே 24 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
நிவாரணக் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை மிகச் சிறந்தத் தீர்மானம் என்றும் இவ்விடயத்தில் அரசியல்வாதிகளின் பயன்பாட்டுக்கு எதிராக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சிறந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அதனை தாங்கள் வரவேற்பதாகவும், இலங்கைத் தொழிலாளர் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வைத்தியர் கே.கிஷாந்த் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் மஹிந்த தேசப்பிரியவுக்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிக்கோயாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர், 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் இருந்ததாகவும் அவர்களது மத்தியஸ்தத்துடன் பலர் 5,000 ரூபாயை பெற்றுக்கொண்டனர் என்றும் ஆனால் கிடைக்க வேண்டியவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
எனவே, 5,000 ரூபாய் கொடுப்பனவை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில், பாதுகாப்புப்படையினரை உள்வாங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோருவதாகவும் தெரிவித்தார்.
ஏனெனில் இலங்கை இராணுவத்தினர் மிகச் சிறந்த சேவைகைள ஆற்றிவருகின்றனர் என்பதை தாம் அறிவதாகவும் குறிப்பாக கொரொனா வைரஸ் நெருக்கடி காலத்தில் இராணுவத்தினர் மிகச் சிறந்த முறையில் செயற்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே 5,000 ரூபாயை கொடுப்பனவை அவர்களைக் கொண்டு பகிர்ந்தளித்தால், எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
56 minute ago
1 hours ago