Janu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த அருன்திகா பிரசாதினி என்ற 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த மாணவி உறவினரின் வீடொன்றுக்கு வந்திருந்த நிலையில் உறவினர்களுடன் கன்னோருவ பிரதேசத்தில் உள்ள மஹாவலி கங்கையில் நீராடச் சென்றுள்ள போது நீரில் மூழ்கியுள்ளார்.
அப்போது உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்ற போதும் முடியாமல் போயுள்ளது. பின்னர் அயலவர்களின் உதவியுடன் மாணவியை காப்பாற்றி பேராதனை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .
மேலும் இவ் விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மொஹொமட் ஆஸிக்
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago