Freelancer / 2024 ஜூன் 01 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இன்று மாலை நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா – உடரதெல்ல – பீட்றூ பெருந்தோட்ட நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களை, தோட்ட நிர்வாகம் அண்மையில் பணிநீக்கம் செய்திருந்தது.
இதையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சென்று களனிவெளி தோட்டத்திற்கு சொந்தமான தொழிற்சாலையின் பணிகளை இடைநிறுத்தி போராட்டம் நடாத்தியிருந்தனர்.
இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதாக தோட்ட நிர்வாகம் உறுதி வழங்கியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் நுவரெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
தமது பணிக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்டோருக்கு எதிராக தோட்ட நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது.
இதையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலிய பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், அங்கு அவரது ஆதரவாளர்களும் ஒன்று கூடியுள்ளனர்.
இதன்போதே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, தோட்ட நிர்வாகம் முறைப்பாட்டை வாபஸ் பெற்றதுடன், தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாக இதன்போது உறுதியளித்துள்ளது.
இதையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.. R
13 minute ago
21 minute ago
24 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
24 minute ago
26 minute ago