Sudharshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
இரத்தோட்டைப் பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான நீரை பெற்றுத்தருமாறு கோரி, தாதியர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று(05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்;.
இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக நாளொன்றுக்கு 500 பேர் வரை வருகை தருவதாகவும் 50-75 நோயாளிகள், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று செல்வதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்;டு மாதங்களாக வைத்தியசாலைக்கு தேவையான நீர்; கிடைக்காததால் நோயளர்கள் முதல் அனைவரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
எனவே, நோயாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு வைத்தியசாலைக்கு நீரை பெற்றுத்தர, உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago