Kogilavani / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், வட்டக்கொடை நகர சிவசுப்ரமணிய அறநெறிப் பாடசாலை மற்றும் வட்டக்கொடை மேற்பிரிவு முத்துமாரி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு, சைவசமய தோத்திரத் திரட்டு நூல்கள் கையளிக்கப்பட்டன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய, இ.தொ.க.வின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த், இந்நூல்களைக் கையளித்தார்.
இந்நிகழ்வில், எழுத்தாளர் டீ.ராஜசேகர், வட்டக்கொடை முச்சக்கர வண்டி சாரதிகள், செல்சி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
33 minute ago
42 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
56 minute ago