George / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பகுதியில் பஜனை வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 5 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த கைகலப்பு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழi இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளதுடன் இதில் காயமடைந்த ஒருவர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை, ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
51 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
8 hours ago