Sudharshini / 2016 பெப்ரவரி 09 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை - கேணஸ் தோட்டத்தின் தொழிற்சங்க தலைவரை, மேற்படி தோட்டத்திலுள்ள உதவி அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசியதுடன் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அந்த தோட்டத்தைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சங்கத் தலைவருக்கும் தோட்ட உதவி அதிகாரிக்கும் இடையில் திங்கட்கிழமை (08) மாலை தொழிலாளர்களின் தொழில் உரிமை தொடர்பில் வாக்குவாதமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, அது தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, 'குறித்த உதவி அதிகாரி எமக்கு வேண்டாம் எனவும் தொழிலாளர் பிரதிநிதிகள் மீது கை நீட்டும் அளவுக்கு அதிகாரிகள் செயற்பட்டால், எதிர்காலத்தில் அடிமை வாழ்க்கை வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரி தொழிலாளர்கள் பணிப்கிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.
இது இவ்வாறிருக்க, 'தொழிற்சங்க பேதமின்றி தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து தொழிற்சங்க காரியாலயங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago