Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 08 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கண்டி-கொழும்பு ரயில் பாதையின் சுதுஹும்பால பகுதியில் இருந்து இரவு வேளையில் பயணித்த நபரொருவர், ரயில் பாதையின் ஓரத்தில் விழுந்த சந்தர்ப்பத்தில், அப்போது பயணித்த ரயிலில், கை சிக்கி, கை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி, தங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலிலிருந்து துண்டான கை, ரயில் வீதியில் கிடப்பதை அவதானித்த பிரதேசவாசிகளால், இன்று (08) காலை 7.00 மணியளவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கையை கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் குறித்த கையை இழந்த நபர், நேற்று (07) இரவு 7.30 மணியளவில் புகையிரத பாதையின் ஓரத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்துள்ளதுடன், அதிலிருந்து மேலே வருவதற்கு ரயில் தண்டவாளத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதன்போது, தண்டவாளத்திலிருந்து கையை வெளியே எடுக்க முயன்றபோது, திடீரென வந்த ரயிலில் தனது கை சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இருள் சூழ்ந்ததால் கையில் இருந்து பிரிந்த பாகத்தை கண்டுபிடிக்க முடியாது போனதாகவும் இறுதியில் தனியாக வைத்தியசாலைக்குச் சென்றதாகவும்தெரிவித்துள்ளார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025