R.Maheshwary / 2022 செப்டெம்பர் 19 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். குமார்
பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் கெசல்கொட்டுவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (18) மாலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு நீர் திறந்து விட சென்ற ஒருவர், சடலம் தொடர்பில், பின்னவல பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உயிரிழந்தவர் கெசல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 72 வயதுடைய கருப்பன் சுப்ரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் மது போதையில், அவ்வீதியில் நடந்து சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025