2025 மே 19, திங்கட்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு வகுப்புத் தடை

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட மாணவர்கள் மூவருக்கு வகுப்புத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சட்ட பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களைத் தாக்கியமைத் தொடர்பாகவே இவர்களுக்குத் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 14ஆம் திகதி  பகிடிவதைத் தொடர்பாகவே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் காயமடைந்த நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சட்டபீடத்தின் அனைத்து கற்பித்தல் செயற்பாடுகளையும் நிகழ்நிலை ஊடாக மாத்திரம் முன்னெடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ள நிலையில், சில மாணவர்கள் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, பல்கலைக்கழகத்துக்குள் தங்கி இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X