Editorial / 2020 செப்டெம்பர் 16 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ, உபேந்திர பிரியங்கர
இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியின் குருவிட்ட புஸ்சல்ல பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் நால்வர், பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொடையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் கேகாலையில் இருந்து இரத்தினபுரி புதிய நகருக்கு அரசாங்க ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பஸ்ஸுமே, இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் அரசாங்க ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் சாரதி உள்ளிட்ட நால்வரே பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
13 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
39 minute ago
54 minute ago