Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான இன்று மாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 20 பேர் காயமடைந்து கொட்டகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் பயணித்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
பஸ்ஸை கட்டுபடுத்த முடியாமல் போனதே இவ்விபத்துக்கான காரணம் என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


7 minute ago
25 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
43 minute ago
2 hours ago