2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பாதையைப் புனரமைக்குமாறு கோரிக்கை

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

ரதல்ல பிரதான வீதி, சென்கூம்ஸ் தோட்டப் பகுதியில் உள்ள பாதையானது, பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், அவ்வீதி வழியாகப் பயணிக்கும்  மக்கள், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பாதையின் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் கொண்ட பகுதியே, குன்றும் குழியுமாகக் காணப்படுகிறது.  

மழைக் காலங்களில் பாதையில் உள்ள குழிகளில் மழைநீர் நிறைந்துவிடுவதால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 

இப்பாதையை, கவுலினா, மெராயா, சென்கூம்ஸ், மட்டுகலை, செந்தோமஸ், கேனஸ், ஹோல்றீம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 8,000  மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் இருந்து அதிகமான பாடசாலை மாணவர்கள், தலவாக்கலை, சென்கூம்ஸ், நாகசேனை, மெராயா ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கும் செல்கின்றனர்.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையமும் இங்குதான் அமைந்துள்ளது.  இங்கு வரும் அதிக வாகனங்கள், மேற்படி பாதையினூடாகவே  பயனிக்கின்றன.  

எனவே, பிரதேச மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இப்பாதையைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .