சிவாணி ஸ்ரீ / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சிவாணி
சப்ரகமுவ மாகாண ஆரம்பகால குழந்தைப் பராமரிப்பு அதிகார சபையின் புதியத் தலைவராக சப்ரகமுவ மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேராவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி அதிகார சபையின் உறுப்பினர்களாக சப்ரகமுவ மாகாண சபையின் பிரதி பிரதான செயலாளர் பராக்கிரம பியசேன, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் சேபால குருப்பு ஆராய்ச்சி, மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர, மாகாண சிறுவர் பராமரிப்பு சேவை ஆணையாளர் சாமர பமுனு ஆராச்சி, மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடற் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ருவான் பிரேமரத்ன, பாடசாலை அதிபர் மொஹொமட் ரவி, உதவிக் கல்விப் பணிப்பாளர் நிரோசி குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 1,700 ஆரம்பப் பாடசாலைகளின் நிர்வாக நடவடிக்கை உட்பட அனைத்து விடயங்களும் மேற்படி சப்ரகமுவ மாகாண ஆரம்பகால குழந்தை வளர்ப்பு அதிகார சபையின் ஊடாகவே என்பதும் குறிப்பித்தக்கது.

3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026