எம். செல்வராஜா / 2020 மே 26 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பிலும் நலன்களிலும் பெருந்தோட்டக் கம்பனிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வது வழமையாகி விட்டதென, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது குறித்து கம்பனியின் பொறுப்புவாய்ந்தவர்களிடம் கோரிக்கைகளை முன்வைப்பது "செவிடன் காதில் ஊதிய சங்கு" போன்றதொரு நிலையே இருந்து வருவதாகவும், இதை நேற்று (25) டிக்கோயாவில் குயளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தோட்டங்களில் தொழில் கடமைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாம்புகள், சிறுத்தைப்புலி, குளவிகள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அவல நிலை ஏற்படுகின்றது. இதனாலும் அவர்கள் பெரும் பாதிப்புக்களை அன்றாடம் எதிர்நோக்கி வருகின்றனர்.ஆனால் தோட்ட நிர்வாகங்கள் இவ் விடயங்களில் எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக தெரியவில்லை.
டிக்கோயா தோட்டத்தில் கடமையிலிருந்த பெண் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை எம்மால் அனுமதிக்க முடியாது.உயிரிழந்த அப் பெண் தொழிலாளிக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் ஏனைய தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் தொழில் ஆணையாளருடன் முறையான பேச்சுவார்த்தை நடாத்துவதோடு இப் பிரச்சினைக்கு முறையான தீர்மானமொன்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் எனவும் இவ் விடயத்துக்கு எதிராக என்னுடைய கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago