எம். செல்வராஜா / 2017 செப்டெம்பர் 24 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை பிரதான பஸ் நிலையத்தில் போலி பிரயாண சீட்டுகளை வழங்கி, பயணிகளிடம் பண மோசடி செய்துவந்த நபரை பொலிஸார் இன்று (24) கைது செய்துள்ளனர்.
சொகுசு பஸ்களில், நடத்துநர் பிரயாண சீட்டுகளை வழங்குவதற்கு முன், குறித்த நபர் தன்னை நடத்துநராக அறிமுகப்படுத்திக்கொண்டு பயணிகளிடம் பணம் பெற்று வந்துள்ளார்.
இது தொடர்பில் பதுளை பொலிஸாருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் இவர் பயணிகளிடம் பணம் வசூலிப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு பொலிஸார் விரைந்தனர். பொலிஸாரைக் கண்ட சந்தேக நபர் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து போலி பயணச்சீட்டுகள் மற்றும் 36 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago