Sudharshini / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
புகையிரத நிலையத்தின் கண்ணாடியை உடைத்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறுபேரையும் தண்டப்பணம் செலுத்துமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் புதன்கிழமை(27) உத்தரவிட்டார்.
மடக்கும்புற, டாப் டிவிஷனில் இடம்பெற்ற தேர்த் திருவிழாவில் இசை வழங்குவதற்காக மாத்தறை, தெணியாயவிலிருந்து வந்திருந்த அறுவர் தேர் திருவிழா முடிந்ததும் தமக்கான ஊதியத்தை பெற்றுகொண்டு வீடு திரும்ப முற்பட்டுள்ளனர். இதன்போது தலவாக்கலை புகையிரத நிலையத்துக்கு வந்த அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை ஒவ்வொருவருக்குமாக பிரித்தெடுக்க முற்பட்டபோது இவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் புகையிரத நிலையத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து புகையிரத நிலையத்தின் பொறுப்பதிகாரி, அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி, சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார். ஸ்தளத்துக்கு வந்த தலவாக்கலை பொலிஸார் மேற்படி அறுவரையும் கைதுசெய்த நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இவர்களை 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மீண்டும் புதன்கிழமை(27) நீதிமன்றில் ஆஜர்பத்தப்பட்டபோது, பொதுசொத்துக்குச் சேதம் விளைவித்த குற்றத்துக்காக 1,573 ரூபாய் 45 சதத்தையும் மதுபோதையிலிருந்து குழப்பம் விளைவித்தமைக்காக தலா 5,000 ரூபாய் வீதம் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago