Kogilavani / 2016 ஜனவரி 13 , மு.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பொங்கல் மற்றும் பட்டிப் பொங்கல் ஆகிய இரு தினங்களிலும் மதுபான நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப-தலைவருமான அ.அரவிந்த குமார், பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபயசிரிக்கு அவசர தொலைநகலை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'அனைத்துத் துறைகளிலும் சேவையாற்றும் இந்துக்கள், தைப்பொங்கலையும் பட்டிப்பொங்கலையும் நன்றி கூறும் பொதுப் பண்டிகையாகவே கருதுகின்றனர்.
எனவே, எதிர்வரும் 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சூரியன் உள்ளிட்ட, தெய்வங்களை வணங்கி நன்றி கூறுவதுடன் மறுதினம் கால்நடைகளுக்கு பொங்கல் படைத்து அவற்றுக்கும் நன்றி கூறுகின்றனர். ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்விரு தினங்களிலும் இந்துக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விடுகின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்' என அவர் அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் கலால் திணைக்கள ஊவா மாகாண ஆணையாளர் மற்றும் கலால் திணைக்கள பதுளை மாவட்டப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026