Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாசிப்பயறு உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு அடைய உள்ளதாகவும் பாசிப்பயறு இறக்குமதியை நிறுத்துவதற்கு உள்ளதாகவும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறிய அவர்,
'முழு வருடத்துக்குமான பாசிப்பயறு நுகர்;வு 26,000 மெற்றிக் தொன்
தேவைப்படுகின்றது. அதில் 14,000 மெற்றிக் தொன் தற்போது உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 12,000 மெற்றிக் தொன் உற்பத்தியை அதிவிருத்தி செய்வதன் ஊடாக அதனை அடைந்துக்கொள்ள முடியும்' என்றார்.
'காலத்துக்கு காலம் குறிப்பிட்ட சில உப உணவுப் பயிர்;களை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஊக்குவித்தல் நடவடிக்கைகள் தொடர்;பாக விவசாயத்திணைக்களம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. அதில் ஒரு கட்டமாகவே 2016ஆம்
ஆண்டு பாசிப்பயறு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி முன்னேறுகின்றது' என அவர் சுட்டிக்காட்டினார்.
'கடந்த வருடம் என்றுமில்லாத வகையில் அரிசி உற்பத்தியில் பாரிய முன்னேற்றம் காணப்பட்டது. அவர்; நாட்டின் முழு
வருடத்துக்குமான அரிசித் தேவை 2.2 மில்லியன் மெற்றிக்தொன்களாகும். ஆனால், கடந்த பெரும்போகத்திலே அந்த இலக்கு அடையப்பட்டு விட்டது.
நாட்டில் மேலதிக உற்பத்தி ஏற்பட இடமுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, நாட்டில் தற்போது நெல் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 4 இலட்சத்து 50ஆயிரம் இலட்சம் ஹெக்டேயர் பரப்பு
வயல்களில் 80,000 ஹெக்டேயர்களை சிறுபோகத்தில் உப உணவுப் பொருள் உற்பத்திக்கு பயன்படுத்துவன் மூலம் மேற்படி விடயங்கள் இலகுப்படுத்தப்படவுள்ளன' என்றார்.
கடந்த வருடத்தில் தேவைப்படும்போது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு வகைகளின் இறக்குமதி வரியை அதிகரித்தும், அல்லது குறைத்தும் உள்ளூர் விவசாயத்தை ஊக்குவித்து விவசாயிகள் பாதிப்படையாது நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago