Sudharshini / 2016 ஜனவரி 25 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலைகளில் கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்;ய தடை விதிக்கப்பட்டுள்ளதென கட்டுகஸ்தோட்டை வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வை.எம்.பீ.யாப்பாரத்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
'பெரும்பாலான நோய்களுக்கு கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளே காரணமாக அமைந்துள்ளன என்று சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளிலும் கடலை, பயறு, கௌப்பி போன்ற தானியங்களினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகள் மற்றும் வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வார்கள்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago