Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹொமட் ஆஸிக்
நபரொருவர் தனது இரண்டு வயது ஆண் குழந்தையை அயல்வீட்டு பெண்ணிடம், ஓரிரு தினங்களுக்கு பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தலைமறைவாகிய சம்பவம் மாத்தளை, கலேவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை ஒப்படைத்து ஒருமாதமாகியும் அவர் இதுவரை வீடுதிரும்பவில்லை என அப்பெண் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் தாய் வேறொருவரை மணம் முடித்து சென்றுவிட்டதாகவும் இக்குழந்தையை வளர்த்து வந்த தந்தையும் குழந்தையை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் அப்பெண் கவலை தெரிவித்துள்ளார்.
குழந்தையை கலேவெல பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார். அவ்வாறு எந்தவொரு பெண்ணும், குழந்தையை இதுவரையிலும் கையளிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
38 minute ago
42 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
42 minute ago
56 minute ago