2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டில் மது: 03 பிள்ளைகளின் தந்தை பலி

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 14 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

புதுவருடத்தைக் கொண்டாடும் வகையில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய வேளையில் மயங்கிய நபரொருவரை, முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது இடம்பெற்ற விபத்தில் அந்நபர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம், பூண்டுலோயா - நாவலப்பிட்டி பிரதான வீதியின் கலப்பிட்டியப் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (13) இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர், இராவணகொட - மல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான எம்.டபிள்யூ.டீ குமாரபால (வயது 42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி, வீதியிலுள்ள மரமொன்றில் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. 

சடலம், பிரேத பரிசோதனைக்காக மல்தெனிய வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .