2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பேத்தி துஷ்பிரயோகம்: தாத்தாவை கைது செய்ய நடவடிக்கை

Gavitha   / 2016 ஜனவரி 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பதுளை ஹாலிஎல பகுதியில் பேத்தியை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்படும் 71 வயதுடைய தாத்தாவை, கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பொகவந்தலாவையைச் சேர்ந்த தாயொருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளார்.

போகும் போது, தனது பெண் பிள்ளையை, ஹாலிஎலவில் உள்ள தனது அப்பாவிடம் (தற்போது வயது 71) பாதுகாப்பாக விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

எனினும், தனது பாதுகாப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பேத்தியை கடந்த ஒன்றரை வருடமாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளார். இவ்விடயத்தை யாருக்கும் கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஒன்றரை வருடத்தின் பின் சுகயீனம் காரமணாக நாடு திரும்பிய குறித்த தாய், தனது பிள்ளை இருக்கும் இடத்துக்குச் சென்று, பிள்ளையை பொகவந்தலாவக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகளிடம் கண்ட சில மாற்றங்களால் சந்தேகம் கொண்ட தாயார், அவரை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். வைத்தியசாலையின் வைத்தியரிடம் குறித்த சிறுமி, கடந்த காலங்களில் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தாய் இன்று வியாழக்கிழமை (22) பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், தனது தந்தையின் செயல் குறித்து முறைப்பாட்டை பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம், சிறுமியை பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை  உறுதியாகியிருப்பதாக, பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.

எனினும், குறித்த சிறுமி மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்காக, அனைத்து ஆவணங்களும் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் பொறுப்திகாரி கேஷி தர்மபிரிய தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .