Kogilavani / 2017 மே 07 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதுளைக்கு விஜயம் செய்திருந்தபோது, வேண்டுமென்றே, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.கவின் பதுளை மாவட்ட அங்கத்தவர்களுக்கான கூட்டம், பதுளை நகரிலுள்ள ஒனிக்ஸ் ஹோட்டலில், சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டரின் மூலம், பதுளை நகருக்கு வந்திருந்தார்.
இவர், பதுளை நகருக்கு வந்தபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிரதமர் மீண்டும் ஹெலிகொப்டரில் தலைநருக்கு திரும்பும்வரை சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டே இருந்ததாக ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டரில் ஏறியப் பின்னர் 10 வினாடிகளுக்குள் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பிவிட்டதாகவும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றும் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மேலும் கூறினர். (படங்கள் பிரதீப் பத்திரண)



5 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Apr 2026
11 Apr 2026