Sudharshini / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தின் பெருந்தோட்டங்களில் அமைந்துள்ள அனைத்து பாதைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய மாகாண வீதி அபிவிருத்தி, வீடமைப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பாரிய அளவில் பெருந்தோட்டங்கள் அமைந்துள்ளன. எனினும், அப்பகுதிகளிலுள்ள பாதைகள் எதுவும் மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமில்லை. இருந்தாலும் அப்பாதைகளை எவரும் அபிவிருத்தி செய்வதில்லை' என்றார்.
'பெருந்தோட்டங்களில் வாழும் மக்களும்; எங்களைப் போன்று, இந்நாட்டில் வாழும் மனிதர்களாவர். அவர்களும் வாக்குரிமை உடையவர்கள். இம்மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிகள், இவற்றை கவனத்தில் கொள்வதில்லை.
எனவே, இது தொடர்பில் மத்திய மாகாணத்தில் பெருந்தோட்டப் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்களை அழைத்து, அவர்களது பிரதேசங்களில் பெருந்தோட்டப் பாதைகளை புனர்நிர்மாணம் செய்யும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இதன் முதல் கட்டமாக பாதைகளை இனங்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என அவர் மேலும் கூறினார்.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago