Kogilavani / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது, மத்திய மாகாண பாடசாலைகள் இரண்டில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மத்திய மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ.பி.விஜேரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
இதன்போது, நாவலப்பிட்டிய ஹபுகஸ்தலாவ பொல்வத்துர மகா வித்தியாலயம் மற்றும் மாத்தளை வில்கமுவ நுககொல்லை வித்தியாலயம் என்பவற்றில் பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டதாக, மாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.
பொல்வத்துர வித்தியாலயத்தில் மாணவி ஒருவருக்கு ஆசிரியை ஒருவர் அநீதியிழைத்துள்ளதாகவும், நுககொல்லை வித்தியாலயத்தில் காலதாமதமாகி வினாத்ததாள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்தே, மேற்படி விடயம் தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
13 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago