Sudharshini / 2016 ஜனவரி 24 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

மயக்க மருந்து கலந்த நீரை அருந்தக் கொடுத்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடமிருந்து 172,000 ரூபாய் பெறுமதியான நகை மற்றும் 4,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் சாரதியை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பதில் நீதவான்ஜகத் மஹகெதர உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலுள்ள இருவேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர், விடுமுறையில் தமது வீடுகளுக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை (22) கண்டிக்கு வந்துள்ளனர். கண்டியில் வைத்து மது அருந்திய இவர்கள், முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தமது வீடுகளுக்குச் செல்ல முனைந்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் மாத்தளையில் இறங்கிய பின்பு மற்றையவர் தனியாக முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவர் முச்சக்கர வண்டியின் சாரதியிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். இந்நிலையில், ஏற்கெனவே மயக்கமருந்து கலந்து வைத்திருந்த நீரை அந்த கான்ஸ்டபளிடம், முச்சக்கரவண்டியின் சாரதி கொடுத்துள்ளார்.
அந்நீரை அருந்திய பொலிஸ் கான்ஸ்டபிள், சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார் அதன்பின்னர், அவர் அணிந்திருந்த 172,000 ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியையும் 4,000 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ள சாரதி, பின்னர் அவரை கீழே தள்ளி வீழ்த்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மயக்கம் தெளிந்தபோது தான் நிலத்தில் விழுந்து கிடந்ததாகவும் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கண்டி - அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியை கைதுசெய்ததுடன் தங்கச் சங்கிலியையும் மீட்டனர். ஆனால், பணத்தை சாரதி செலவளித்திருந்தாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி சாரதியை சனிக்கிழமை மாலை, கண்டி பதில் நீதவான் ஜகத் மஹகெதர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago