Editorial / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 வயது மகனின் முகத்திலும்,கை,கால்களிலும் நெருப்பினால் சுட்டத் தந்தை கடந்த 2ஆம் திகதி தலவாக்கலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை பகுதியைச் சேர்ந்த 48 வயதான தந்தையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அயல் வீட்டிலுள்ள பென்ட்ரைவினைத்(pendrive) திருடியமையினால் ஆத்திரமடைந்த தந்தை சிறுவனை கடுமையாகத் தாக்கி கதிரை ஒன்றில் கட்டி வைத்து நெருப்பினால் முகத்திலும்,கை கால்களிலும் சுட்டுள்ளார்.
இதனையடுத்து தந்தை தலவாக்கலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும்,சிறுவன் சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
31 Mar 2026
31 Mar 2026