Kogilavani / 2016 மார்ச் 09 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
சர்வதேச மகளிர் தினமான நேற்று(8) கண்டியில், „அவள் இல்லாத உலகம் சாத்தியமா?... என்றத் தொனிப்பொருளில் அமைதி ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட உதவிச் செயலாளரும் ஒருங்கிணைப்பாளரும் கண்டி மாவட்ட லக்வனிதா அமைப்பின் தலைவியுமான சாந்தினி கோங்காகே தலைமையில் ஆரம்பமான இவ் ஊர்வலம்;, தலதாமாளிகைக்கு அருகிலிருந்து கண்டி பொதுத் தபால் நிலையம் வரைச் சென்றது.
ஊர்வலத்தின் இறுதியில் தபால் நிலையக் கேட்போர் கூடத்தில் பொதுக் கூட்டம்; நடத்தப்பட்டது.
அதில் மனித அபிவிருத்தித் தாபனத்தின் பிரதான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளரும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான திருமதி பொ.லோகேஸ்வரி, 'பெண்கள் விடுதலைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி.ராதா வெங்கட்ராமன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago