Sudharshini / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இருவர் படுகாயமைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தோட்டத்திலுள்ள ஆலயத்துக்கு அருகில் இருந்த மண்மேட்டை, இருவர் ஞாயிற்றுக்கிழமை (07) வெட்டி அகற்றியுள்ளனர். இதன்போது, மண்மேடு திடீரென சரிந்து இருவர் மீதும் விழுந்துள்ளது.
இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டடிய ஆதார வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago