Sudharshini / 2016 ஜனவரி 19 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவருக்கு, 2 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் தண்டப்பணமும் 6 மாதத்திற்கு சாரதி அனுமதி பத்திரத்தை இரத்து செய்யும் உத்தரவையும் ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் பிரசாத் லியனகே திங்கட்கிமை (18) பிறப்பித்தார்.
மேற்படி சாரதி, கடந்த 17ஆம் திகதி களுத்துறை, ஹொரண கஹடபிட்டிய பகுதியிலிருந்து 39 யாத்திரிகளை சிவனொளிபாதமலைக்கு ஏற்றிச்சென்று, யாத்திரை முடிந்த பின்னர் மீண்டும் அவர்களோடு திரும்பியபோது நோர்வூட்- ஹட்டன் பிரதான வீதியின் நியூவெளி பகுதியில்; சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது, பஸ் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும் அவரை கைது செய்து பொலிஸ் பிணையில் விடுவித்திருந்ததாகவும் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அந்த சாரதியை ஹட்டன் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (18) ஆஜர்படுத்திய போது, சந்தேகநபரான சாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago