2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மதுபானம் விற்பனை செய்தவர் கைது

Sudharshini   / 2016 ஜனவரி 24 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

பௌர்ணமி தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த 55 வயது நபரை கட்டுஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்ததுடன், சனிக்கிழமை (23) மாலை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய, மாரத்துகொடை பிரதேசத்தை சேர்ந்த நபரே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் இரகசியமான முறையில்  மதுபானம் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்படி இடத்துக்கு சென்ற பொலிஸார் ஒருதொகை மதுபானத்துடன் இந்நபரை கைதுசெய்தனர்.

இவரை எதிர்வரும் 26ஆம் திகதி கண்டி நீதவான் முன் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .