Sudharshini / 2015 டிசெம்பர் 01 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை, கனுபெலல்ல பகுதியில் தனது மனைவியைக் கத்தியால் குத்தி படுகாயமடையச்செய்த நபரை, பதுளை பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
திங்கட்கிழமை (30) மாலை குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த யுவதியை, மேற்படி யுவதியின் கணவர் திடீரென கத்தியால் பலமுறை குத்தி படுகாயமடையச் செய்துள்ளார். இதில் படுகாயமடைந்த குறித்த பெண்ணை அயலவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து பதுளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த யுவதியின் கணவரை பதுளைப் பொலிஸார்; கைது செய்துள்ளனர்.
மேற்படி யுவதி, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தொழில் புரிந்து வருகின்றார் எனவும் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பதுளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026