2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மரக்கறி வியாபாரிகளுக்கு நிரந்தர இடம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா- கண்டி பிரதான வீதி மற்றும் நானுஓயா குறுக்கு பாதைகளில், மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு  வரும் வியாபாரிகளுக்கு, நிரந்தர இடத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.திலகராஜ் தலைமையில், திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போதே, இவ்விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்படி வியாபாரிகளுக்கு நிரந்தர இடமொன்றை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆவணம் செய்வதாக,  நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X