Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Kogilavani / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, ஸ்பிரிங்வெளி மேமலை தோட்டத்தில், மரண வீடொன்றுக்குச் சென்றுவந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, மரண வீட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்பிரிங்வெளி, மேமலை தோட்டத்தைச் சேர்ந்த 69 வயது பெண்ணொருவர், உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில் அவரது மரண வீட்டுக்கு ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் சென்றுவந்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிவரும் மேற்படி நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்நபர் பதுளைக்குச் சென்று வந்தமை தெரியவந்ததையடுத்து ஹட்டன் பொலிஸார் உடனடியாக இவ்விடயத்தை பதுளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பதுளை பொலிஸார், ஸ்பிரிங்வெளி தோட்டத்துக்குச் சென்று மரணவீட்டுக்கு வந்த அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளதுடன் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago