Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இந்திக அருண குமார
தன்னை நிரந்தர சேவையில் அமர்த்துமாறு கோரி, மரத்திலேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நாவுல நீதவான் நீதிமன்ற காவலாளிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பீ.எம்.ஜீ.சாந்தகுமார புளுகஹமுல்ல (வயது 41) என்பவரே நாவுல நீதிமன்றிலிருந்து தம்புள்ளை நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் தனது சேவையை நிரந்தரமாக்குமாறு கோரி, புதன்கிழமை (20) மரத்திலேறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த நாவுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்நபரை கீழே இறங்குமாறு பணித்தபோதும், மேற்படி நபர் அவரது பணிப்புரையை நிராகரித்துவிட்டு தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடி மற்றும் மின்விளக்குகள் காணாமல் போனமை தொடர்பில், மேற்படி நபரிடம் நாவுல நீதவான் விசாரித்தபோது அதற்கும் அந்நபர் உரிய பதிலை வழங்க மறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்தே நீதவான் மேற்படி நபரை இடமாற்றியுள்ளதுடன், அது தொடர்பிலான கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.
நீதவானின் உத்தரவை தொடர்ந்து மேற்படி நபர் மரத்திலிருந்து கீழே இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago