Janu / 2024 மே 23 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்-கண்டி பிரதான வீதியின் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் வியாழக்கிழமை (23) அன்று பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹட்டனில் இருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி,கொழும்பிற்கு செல்லும் வாகனங்களுக்கும் , கொழும்பு, கண்டி பகுதிகளில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு பயணிக்கும் வாகனங்களுக்கும் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது .
இந் நிலையில் , வட்டவளை பொலிஸார் பொது மக்களின் உதவிகளுடன் மரத்தின் பாரிய கிளைகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
ஆ.ரமேஸ்


40 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
55 minute ago