Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
மருந்துகள் தொடர்பான கட்டமைப்பு புதுப்பிக்கப்பட்டு, மருந்து கடைகளில் உரிய நேரத்தில் மருந்துகள் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் என, பதுளை பொது வைத்தியசாலை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று (21) பதுளை பொது வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடுக்கு அண்மித்ததாக தனியார் பிரிவுகளில் மருந்துகளின் விலையும் வேகமாக உயர்ந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இதன் மூலம், நோயாளிகள் இரண்டு வழிகளில் ஆதரவற்றவர்களாக மாறுகிறார்கள்.
புற வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், அந்த வைத்தியசாலைகளில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுவதுடன், அங்கு அதிக விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டி வரும். இதனால், மருந்து விலையை கட்டுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம், நுரையீரல் நோய்களுக்கு தினமும் மூன்று வேளை மருந்து சாப்பிட்டவர்களுக்கு ஒரு வேளையாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நோயாளிகளே தாம் அருந்தும் மருந்தின் அளவைத் தீர்மானிப்பதால், நோயாளியின் உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நமது நாட்டில் 78 சதவீத மரணங்கள் தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன.
எனவே இந்நிலைமையால், தொற்றாத நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் எமது கையை விட்டு நழுவுவதுடன், நோயாளர்களின் நோய் நிலை மோசமடைந்துள்ளது.
அத்துடன், புற்று நோயாளிகளின் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் அறுபது திணைக்களங்கள் உள்ளதோடு அனைத்திலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்றது.
எனவே தயவு செய்து இதற்கு தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் இவ்வாறு நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது நாட்டின் அடிப்படை மனித உரிமை மீறலாகவே கருதுகிறேன் என்றார்.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago