2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மர்ம பொருள் வெடித்ததில் சிறுவன் படுகாயம்

Sudharshini   / 2016 ஜூலை 03 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

தனது தாயுடன் மகாவலி கங்கையில் நீராடுவதற்கு சென்ற 12 வயது சிறுவன்,  அப்பகுதியில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் காயமடைந்த நிலையில்  கண்டி போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தனது தாயுடன் கண்டி பொல்கொல்லை பிரதேசத்தில் சனிக்கிழமை (02) நீராடுவதற்காக மகாவலி கங்கைக்குச் சென்றுள்ளான். இதன்போது, கங்கையின் அருகே உள்ள  காட்டுப் பகுதிக்கு அவ்வேலையில் தீ வைக்கப்பட்டுள்ளது. இத்தீக்கு சிக்கிய போத்தலில் அடைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சிறுவனின் உடம்பில் குத்தியுள்ளன.

இவ்வாறு வெடிப்புக்கு உள்ளான மர்ம பொருள் என்ன என்பதைப் பற்றி எவ்வித தகவலும் தெரிய வரவில்லை என்றும், சிலர் மகாவலி கங்கையில் மீன் பிடிப்பதற்காக பல வகை வெடி பொருட்களைப் பாவிப்பதாகவும் அவ்வாறு பாவிக்கப்பட்ட வெடி  பொருட்களில் கங்கையின் ஓரத்தில் இருந்து  இவ்வாறு வெடித்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .