Kogilavani / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
நோர்வூட் மைதானத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வீதியோர விளம்பர பதாகைக்கும், சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் கூறினார்.
இச்சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேற்படி மைதானத்துக்கு பொறுப்பான எம்.சண்முகரட்ணம் என்பவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
கொட்டகலை நகரில் வைக்கப்பட்டிருந்த கூட்டணியின் விளம்பர பதாகை, திங்கட்கிழமை (8) இரவு சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் தொடர் சம்பவமாக நோர்வூட்டில் வைக்கப்பட்டிருந்த பதாகைக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026