R.Maheshwary / 2022 ஜனவரி 31 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச நடமாடும் சேவை முகாமொன்று, ஜனவரி மாதம் 29ஆம் திகதி, கொத்மலை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (29) கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நடமாடும் சேவையில் முகாமில் பிறப்பு சான்றிதழ் அற்ற பாடசாலை மாணவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்களை பதிவுசெய்தல் , கொரோனா நோய் தொற்றின் பரவுதல் வேகத்தை தடுப்பதற்கான சுகாதார வழிமுறைமைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான செயற்பாடுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , இவ்வாறான நடமாடும் சேவை முகாம்களை அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .