Gavitha / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டக்கலை தமிழ் வித்தியாலயத்தில், மூன்று மாணவர்களுக்கு இன்று (25) காலை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என, நுவரெலியா பொதுசுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கையின் இறுதி நாளுக்குரிய பாடசாலை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் தவணைக்காக இப்பாடசாலையின் மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதால், தொற்றுக்கு உள்ளான மாணவர்கள், அவர்களின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொதுசுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரம் பரீட்சை நடத்தப்படவுள்ளதால், பாடசாலை முழுவதும் தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு, சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025