2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக

அயல்வீட்டில் மின்தடை ஏற்பட்டதால், அதனை பரிசோதிப்பதற்காக மின்கம்பத்தில் ஏறிய மின்சார சபை ஊழியர் ஒருவர், மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மொனராகலை, எத்திமலை  50ஆம் பிரிவில் வசித்து வந்த கே.கே. சமிந்த கொடிதுவக்கு (வயது 39) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக, மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்,  எத்திமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .