R.Maheshwary / 2021 நவம்பர் 02 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நாவலப்பிட்டி- கிறீன்வூட் பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர், மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நாவலப்பிட்டி- போஹில் தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதான ரொபின்சன் என நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலவும் சீரற்ற வானிலையால், குறித்த கல்குவாரியின் பாறையொன்றில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பாறை துண்டுதுண்டாக உடைந்துள்ளதுடன், அதில் ஒரு துண்டு குறித்த இளைஞனின் தலையில் விழுந்தால், சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளான்.
மேலும் மற்றுமொரு கற்துண்டு பெக்கோ இயந்திரத்தின் சாரதி மீதும் விழுந்துள்ளதால் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,பெக்கோ இயந்திரமும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago