Janu / 2025 ஜூலை 03 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவன்தலாவ , கொட்டியாகலை தோட்டத்தின் ஹேன் பீல்ட் தோட்டத்தில் இருந்து புதன்கிழமை (02) அன்று மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொகவன்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஒரு குழுவினர் உடலை அடையாளம் காண சென்றுள்ளனர்.
அதன்படி, இறந்தவர் டிக்கோயா, ஹேன் பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 73 வயது கருப்பன் வீரப்பன் என அவரது மனைவி மற்றும் மகன் அடையாளம் கண்டனர்.
இந்த நபர் இதய நோய் காரணமாக டிக்கோயாவில் உள்ள க்ளென்கான் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது அங்கிருந்து இருந்து தப்பிச் சென்றதாகவும், இந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
சுதத் எச்.எம் ஹேவா

59 minute ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
8 hours ago
27 Oct 2025